செய்திகள் :

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

post image

மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார்.

திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சுழற்சி முறையில் இந்த பணியை செய்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்தில் அபிநயாவும், மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

வெளியில் இருந்த மற்றொரு பெண் காவலர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். இதில் அபிநயா இடது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.

பின்னர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, ஆயுதப்படை டி.எஸ்.பி, நாகூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பெண் போலீஸ் அபிநயா

மேலும் அபிநயா உடலை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் எஸ்.பி அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டி விசாரணை மேற்கொண்டார். அபிநயா குறித்து பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் கேட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், "அபிநயா பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரும், அபிநயாவும் நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே 1-ம் தேதி அந்த ஆண் காவலர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநயா.

இதையடுத்து 15 நாட்கள் விடுமுறை எடுத்தச் சென்றவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் தவித்த அவருக்கு தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் விசாரணை முடிவில் தெரிய வரும்" என்றனர்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அபிநயா உடல், உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவன் வாங்கிய ரூ.25000 கடனுக்காக மகனை அடமானம் வைத்த தாய்; மீட்க வந்தபோது புதைக்கபட்டிருந்த மகன்..

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் வாத்து உரிமையாளரிடம் சென்சையாவும், அவரது மனைவி அனகம்மா ஆகியோர் தங்களது மூன்று மகன்களுடன் வாத்து மேய்த்து வந்துள்ளனர்.சென்சையா தான் வேலை செய்த வாத்து உரிமையாளரிடம் ரூ.25 ஆ... மேலும் பார்க்க

6 மாதத்தில் பிரிந்த மனைவி; திருமண ஏற்பாடு செய்த புரோக்கரை கொடூரமாக கொன்ற கணவன்!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கணவன் கொலை செய்த சம்பவம் மங்களூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வாமஞ்சூர் பகுதி... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `பகீர்'

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம... மேலும் பார்க்க

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க