அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிகர லாபம் 8% அதிகரிப்பு!
புதுதில்லி: மார்ச் காலாண்டு முடிய, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளதாக அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.12.9 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட்.
அதே வேலையில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 19 சதவிகிதம் அதிகரித்து ரூ.161.7 கோடியாக உள்ளது என்றும், 2024 நிதியாண்டின் 4-வது காலாண்டில் அது ரூ.135.4 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
அதன் நிர்வாக இயக்குநர் பதம் கருணாகர் மேலும் தெரிவித்ததாவது:
நிதியாண்டு 2025 நிறுவனத்திற்கு ஒரு மைல்கல் ஆண்டாக அமைந்து. நிறுவனத்தின் வருவாய் ரூ.562.07 கோடியை எட்டியதன் மூலம் நாங்கள் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம் என்றார். இது ஆண்டுக்கு ஆண்டு 51.24 சதவிகித வளர்ச்சியை உள்ளடக்கியுள்ளது. மேலும் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் நீக்கத்துக்கு முந்தைய வருவாய் ரூ.132 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் வலுவான ஆர்டர் புத்தகம், வினியோகம் திட்டங்கள், திட்டமிடுதல் மற்றும் பல உயர் மதிப்புள்ள தயாரிப்புகளை உற்பத்தி நிலைக்குத் தரமான மாற்றம் செய்வதன் விளைவாகவே இது வந்துள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்குகிறது.
இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 68,572 கோடி டாலராக சரிவு