செய்திகள் :

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜுஸ் நீக்கம்!

post image

இணையவழிக் கல்விச் சேவையை வழங்கிவரும் பைஜுஸ் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும், விளம்பரங்களைக் கிளிக் செய்தால், தோன்றும் இணையதளத்தின் முதல் பக்கமும் பயனர்களுக்குத் தெரியாத வகையில் செய்யப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமின்றி, பைஜுஸ் செயலியில் ஏற்கெனவே பணம் செலுத்தி விடியோக்களைப் பார்த்துவந்த பயனர்களுக்கு அந்த அமசமும் இணையதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அமேசான் இணைய சேவைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நிலுவையில் வைத்திருந்த காரணத்தால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜுஸ் செயலி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இணைய சேவையானது, பைஜுஸ் செயலியிலுள்ள விடியோக்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கிவந்தது. அதாவது, பைஜுஸ் செயலியின் விடியோக்களை பயனர்கள் எளிதில் அணுகும் வகையில், செயலியின் அணுகுமுறை, நெட்வொர்க்கிங், ஸ்டோரேஜ் (நினைவகம்) போன்றவற்றை நிர்வகித்துவந்தது.

இந்தச் சேவையை வழங்கிவந்ததற்கான உரிய நிதியை பைஜுஸ் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜுஸ் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்த பைஜுஸ் நிறுவனம், தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஐபோன் மட்டுமல்ல; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!

அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிகர லாபம் 8% அதிகரிப்பு!

புதுதில்லி: மார்ச் காலாண்டு முடிய, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளதாக அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.2023-24 ஜ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகள் விற்பனை: எல்ஐசி ‘கின்னஸ்’ சாதனை!

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, ஒரே நாளில் நாடு முழுவதும் சுமாா் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) சனிக்கிழமை தெரிவித்தது. இதுத... மேலும் பார்க்க

ரூ.32,000 தள்ளுபடி விலையுடன் சாம்சங் கேலக்ஸி ஸீ ஃபோல்ட் 6!

மடக்கும் வகையிலான மொபைல்களை வாங்க நீண்ட காலமாக காத்திருப்பவர்களுக்கான ஜாக்பாட்டாக சாம்சாங் நிறுவனத்தின் மொபைல் தற்போது ரூ.32,000 வரையிலான சலுகை விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.கூகுள் நிறுவனத்தின... மேலும் பார்க்க

குஜராத்: ரூ.920 கோடியில் வித்லாபூர் ஆலையை விரிவாக்கும் ஹோண்டா!

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் வித்லாபூரில் இயங்கி வரும் உற்பத்தி ஆலையை ரூ.920 கோடியில் விரிவாக்கம் செய்து, நான்காவது உற்பத்தி மையத்தை உருவாக்கவிருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ந... மேலும் பார்க்க

அசோக் லேலண்டின் நிகர லாபம் புதிய உச்சம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் அந்த நிதியாண்டு முழுமையிலும் அதிகபட்ச நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

ஜிஎன்எஃப்சி நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 62% உயர்வு!

புதுதில்லி: குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து ரூ.211 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.கடந்த ஆண்... மேலும் பார்க்க