செய்திகள் :

`12 ஆண்டுகளாக பெண்ணுடன் தொடர்பு' - ஃபேஸ்புக் பதிவால் மகனை கட்சியிலிருந்து நீக்கிய லாலு பிரசாத் யாதவ்

post image

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய பெண்ணுடன் தனது புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் படத்தில் காணப்படும் அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுக்கும் தனக்கும் 12 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் தேஜ் பிரதாப் குறிப்பிட்டு இருந்தார்.

தேஜ் பிரதாப் பேஸ்புக் பதிவு

இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு சரியான நேரம் வாய்க்கவில்லை. இப்போது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இப்பதிவை பின்னர் நீக்கிய தேஜ் பிரதாப் யாதவ், தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், தனது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது தேஜ் பிரதாப் யாதவின் இந்நடவடிக்கைக்காக அவரை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து நீக்கி லாலு பிரசாத் யாதவ் நீக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் வெளியிட்டுள்ள செய்தியில், "தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தை தவறவிடுவது சமுதாய நீதிக்கு போராடுவதை பலவீனப்படுத்தும், எனவே தேஜ் பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்.

லாலு பிரசாத் யாதவ்

மேலும் தனது மகன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முடிவுகளை எடுக்க முடியும். அவருடன் தொடர்பில் இருக்க விரும்புவோர் சுதந்திரமாக முடிவு செய்யலாம். பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மரியாதையை ஆதரித்து வருகிறேன். குடும்பத்தின் கீழ்ப்படிதலுள்ள உறுப்பினர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

2018ம் ஆண்டு தேஜ் பிரதாப் யாதவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய் மகள் அனுஷ்காவை திருமணம் செய்தார். ஆனால் இத்திருமணம் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். 12 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த தேஜ் பிரதாப் ஏன் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மீண்டும் பரவும் கொரோனா; மும்பை, பெங்களூருவில் 5 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த 10 நாள்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் மும்பை மற்றும் ... மேலும் பார்க்க

``கேப்டன் சோபியா குரேஷி-க்கு நேரில் கொடுப்பேன்'' -`ஆபரேஷன் சிந்தூர்' சேலை தயாரித்த நெசவாளர் உருக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

Abraham Lincoln: ஆபிரகாம் லிங்கன் கொலை: 'ரத்தக்கறை படித்த கையுறை' ரூ.12 கோடிக்கு ஏலம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்ட இரவில் அணிந்திருந்த உடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் லிங்கன் அறக்கட்டளைக்கு அதன் 20 ஆண்டுக்கால கடன்களை அடைக்க 7.9 மில்லியன் ட... மேலும் பார்க்க

US: விமானத்தில் அருகில் இருந்த பயணியை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற பெண்.. 64 லட்சம் அபராதம்!

விமானத்தில் பயணித்தபோது முன்பின் தெரியாத பயணிக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணுக்கு $ 77,272 ( இந்திய மதிப்பில் தோராயமாக 64 லட்சமாகும்) அபராதம் விதித்துள்ளனர்.லாஸ் வேகாஸிலிருந்து அட்லாண்டா செல்லும் டெ... மேலும் பார்க்க

`எலிகள் தொட்ட தண்ணீர் மருந்து' - பிரதமர் மோடி சென்ற கர்னி மாதா கோயில் வரலாறு என்ன?

பிரதமர் மோடி நேற்று (மே 22) ராஜஸ்தான் மாநிலம் பிகானருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். அதற்குப் பிறகு தேஷ்னோக் பகுதியில் இருக்கும் பு... மேலும் பார்க்க

Siddharth: ``சித்துவுக்காக சிந்தூர்'' - அதிதி ராவ் ஹைதரி குங்குமம் குறித்து சித்தார்த் பதிவு!

'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் நடிகர் சித்தார்த் இணைந்து நடித்தார். அப்போதிருந்து இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதை இருவரும் உறுதிப்படுத்தி, கடந்த ஆண்டு... மேலும் பார்க்க