செய்திகள் :

`எலிகள் தொட்ட தண்ணீர் மருந்து' - பிரதமர் மோடி சென்ற கர்னி மாதா கோயில் வரலாறு என்ன?

post image

பிரதமர் மோடி நேற்று (மே 22) ராஜஸ்தான் மாநிலம் பிகானருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். அதற்குப் பிறகு தேஷ்னோக் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கர்னி மாதா கோயிலில் வழிபாடு செய்தார்.

இந்தக் கர்னி மாதா கோவில் உள்ளூர் மக்களால் எலி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 25,000 எலிகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.

கர்னி மாதா கோயில்:

ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் இருக்கிறது கர்ணி மாதா கோயில். துர்கா தேவியின் அவதாரமாக நம்பப்படும் கர்ணி மாதா இந்தக் கோயிலின் முக்கிய தெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.

பிகானர் ராஜவம்சத்தால் பல நூற்றாண்டுகளாக வழிபடப்பட்டு வரும் இந்தக் கோயில் சரணி சகாதி பக்தர்களுக்கு மிக முக்கியமான யாத்திரைத் தலமாகும்.

யார் இந்த கர்னி மாதா?:

1387-ம் ஆண்டு ஒரு சரண் குடும்பத்தில் பிறந்த பெண் ரிகுபாய். இவருக்கு சாதிகா கிராமத்தைச் சேர்ந்த தேபாஜி சரண் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் சில வருடங்களிலேயே உலக வாழ்க்கையில் நாட்டத்தை இழந்த அவர், அவர் தனது தங்கை குலாப்பை தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு ஆன்மீகத்தில் இறங்கினார்.

உள்ளூர் மக்களுக்கு சேவை செய்துவந்ததால் அவரை எல்லோரும் கார்னி மாதா என அழைக்கத் தொடங்கினர். அவர் 151 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பிறகு, பக்தர்கள் அவர் வழிபட்ட இடத்தில் அவரது சிலையை நிறுவினர். தற்போது அது வழிபாட்டுத் தலமாக மாறியுள்ளது.

எலிகளுக்கு என்ன சிறப்பு?

உள்ளூர்வாசிகளுக்கு, கோயிலில் உள்ள எலிகள் தெய்வத்தைப் போலவே தெய்வீகமானவை என நம்புகின்றனர்.

இது தொடர்பாக பேசிய பக்தர் ஒருவர், 'கோயில் தோன்றியதிலிருந்து எலிகள் உள்ளன. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அவர்களுக்கு எலிகள் அருந்திய தண்ணீரை கொடுப்பார்கள். இங்கு இருக்கும் எலிகள் சாதாராண எலிகள் அல்ல.

மோடி - கர்னி மாதா கோயில் - ராஜஸ்தான்.
மோடி - கர்னி மாதா கோயில் - ராஜஸ்தான்.
மோடி - கர்னி மாதா கோயில் - ராஜஸ்தான்.
மோடி - கர்னி மாதா கோயில் - ராஜஸ்தான்.

இவை மறுபிறவி எடுத்த மூதாதையர்கள். நல்லொழுக்க வாழ்க்கை வாழும் மக்கள் எலிகளாக மறுபிறவி எடுத்து இந்தக் கோயிலில் தஞ்சமடைவார்கள்" எனக் குறிப்பிடுகிறார். இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக இந்தக் கோயிலுக்கு சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார்.

US: விமானத்தில் அருகில் இருந்த பயணியை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற பெண்.. 64 லட்சம் அபராதம்!

விமானத்தில் பயணித்தபோது முன்பின் தெரியாத பயணிக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணுக்கு $ 77,272 ( இந்திய மதிப்பில் தோராயமாக 64 லட்சமாகும்) அபராதம் விதித்துள்ளனர்.லாஸ் வேகாஸிலிருந்து அட்லாண்டா செல்லும் டெ... மேலும் பார்க்க

Siddharth: ``சித்துவுக்காக சிந்தூர்'' - அதிதி ராவ் ஹைதரி குங்குமம் குறித்து சித்தார்த் பதிவு!

'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் நடிகர் சித்தார்த் இணைந்து நடித்தார். அப்போதிருந்து இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதை இருவரும் உறுதிப்படுத்தி, கடந்த ஆண்டு... மேலும் பார்க்க

கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!

ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலங்கள் அணியும் ஆடைகளும் அணிகலன்களும் பரவலாக பேசப்படுவதுண்டு. இந்த ஆண்டு வளர்ந்துவரும் இந்திய நடிகையும் மாடலுமான ருச்சி குஜ்ஜார், தனது ஃபேஷன் மூலம் உலகம் மு... மேலும் பார்க்க

``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக்கும் மேஜர் ஜெனரல்!

பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இத்தாக்குத... மேலும் பார்க்க

`ஒரு வருடத்துக்கு லீவ்; ஆனா, முழு சம்பளம்' - சீன நபருக்கு அடித்த ஜாக்பாட்; எப்படி தெரியுமா?

தான் வேலை செய்யும் நிறுவனத்தில் 365 நாட்கள் ஊதியத்துடன் சேர்ந்த விடுப்பை குலுக்கலில் வென்றுள்ளார் ஒருவர். சீனாவைச் சேர்ந்த அவர், நிறுவனத்தின் நிர்வாகி பொறுப்பில் இருக்கிறார். '365 நாட்கள் ஊதியத்துடன் ... மேலும் பார்க்க

Bryan Johnson: `இளமை திரும்புதே...' வயதை ரிவர்ஸ் செய்ய முயற்சி; தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ

முக்கிய குறிப்பு: மருத்துவர்களின் பரிந்துரையின்றி எவ்வித சிகிச்சையையும் மேற்கொள்ளக் கூடாது. அது சட்டத்திற்குப் புறம்பானது. அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜா... மேலும் பார்க்க