செய்திகள் :

Retro நாயகிகள் 05: `அவர் எடுத்த அந்த ரெண்டு முடிவுகள்' - நடிகை ஶ்ரீவித்யா நினைவலைகள்

post image

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, கேமராவோட எந்தக் கோணத்துல பார்த்தாலும் அழகா தெரிஞ்ச ஒரிஜினல் பியூட்டி, நடிகை ஶ்ரீவித்யா பத்திதான் தெரிஞ்சுக்கப்போறீங்க.

ஶ்ரீவித்யாவோட மரணத்துக்கு அப்புறம், அவரோட பர்சனல் லைஃபை பத்தி நிறைய பேர் வீடியோ இன்டர்வியூ கொடுத்திருக்காங்களே; இந்தக் கட்டுரையில என்ன புதுசா இருக்கப்போகுதுன்னு யோசிச்சீங்கன்னா, வாழ்க்கையோட மேடு, பள்ளங்களை சந்திக்கிறதுக்கு முன்னாடி, மனசுலபட்டதை அப்படியே பேசுற இளவயசு ஶ்ரீவித்யாவைப்பத்தின பல விஷயங்களை இந்தக் கட்டுரையில நீங்க வாசிக்கலாம்.

நடிகை ஶ்ரீவித்யா
நடிகை ஶ்ரீவித்யா

ஶ்ரீவித்யா சென்னைப் பொண்ணு; தமிழ்ப்பொண்ணு. அப்பா கிருஷ்ணமூர்த்தி நடிகர். அம்மா எம்.எல்.வசந்தகுமாரியோ புகழ்பெற்ற கர்நாடகப் பாடகி. சினிமாவிலேயும் பாடியிருக்காங்க. ஸோ, ஶ்ரீவித்யா சினிமாவுக்குள்ள என்ட்ரி ஆகுறதுக்கான பாதை அவங்க வீட்டுக்குள்ளேயே இருந்துச்சு. அப்புறம் பக்கத்து வீட்டிலேயும். ஏன்னா, நாட்டியப்பேரொளி நடிகை பத்மினியோட வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் ஶ்ரீவித்யாவோடது. ஏற்கனவே அழகான முகம், முறைப்படி பாட்டு, நடனம்னு ஒரு நடிகைக்கான அத்தனை பிளஸ்ஸோட இருந்தவங்க, பத்மினியம்மா மேக்கப் போடுறதை வெச்ச கண்ணை எடுக்காம பார்ப்பாங்களாம். விளைவு, பத்மினி நடிச்ச 'திருவருட்செல்வர்' படத்துல வர்ற சிவன் - பார்வதி நடனத்துல பார்வதியா நடனமாடினாங்க ஶ்ரீவித்யா. 1953-ல பிறந்த ஶ்ரீவித்யாவுக்கு, இந்தப் படத்துல நடனமாடிப்போ பதினாலு வயசுதான். வித்யா மூர்த்திங்கிற பேர்ல அறிமுகமாகியிருப்பாங்க.

உண்மையான பேரே ஶ்ரீவித்யாதான். வீட்ல, நெருங்கின வட்டத்துல வித்தி. சொந்த பேர்ல தான் சினிமாவுல அறிமுகமாகுறாங்க. தமிழ்ல இவங்களோட முகம் எல்லாருக்கும் தெரிஞ்ச படம்னா, அது 'நூற்றுக்கு நூறு.' படத்தோட ஹீரோ ஜெய்சங்கர். சின்ன ரோல், அதுவும் நெகட்டிவ் ரோல். அவரோட முகமும் கண்களும் 'பொய் சொல்ற' தவிப்பை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும் அந்தப்படத்துல. அது, அவர் கத்துக்கிட்ட நாட்டியம் சொல்லிக்கொடுத்த ஸ்கில். இந்தப் படத்துக்கு அப்புறம் 'மெட்ராஸ் டு டெல்லி', 'சொல்லத்தான் நினைக்கிறேன்'னு அடுத்தடுத்து நடிக்க ஆரம்பிச்சாங்க.

நடிகை ஶ்ரீவித்யா
நடிகை ஶ்ரீவித்யா

அடுத்து தன்னோட வாழ்க்கையில என்னென்ன நடக்கப்போகுதுன்னு தெரியாத ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட காலத்துல, ரொம்ப இயல்பா ஆனந்த விகடனுக்கு ஓர் இன்டர்வியூ கொடுத்திருக்காங்க ஶ்ரீவித்யா. 'போல்டான பேசுறேன்னு எதையாவது கன்னாபின்னான்னு சொல்லி வைக்காதே'ன்னு அதட்டுற அம்மா எம்.எல்.வி.யை, 'அம்மா நீ போட்டோ ஷூட்டுக்கு ரெடியாகிட்டு வா'ன்னு அனுப்பி வெச்சிட்டு, பயமறியாத இளங்கன்று மாதிரி படபடன்னு பொரிஞ்சு தள்ளியிருப்பாங்க அந்த பேட்டியில.

''நூற்றுக்கு நூறு பட ரிலீஸுக்கு அப்புறம் நீங்க குண்டா இருக்கிறதாலதான் பட வாய்ப்புகள் வர மாட்டேங்குதுன்னு இன்டஸ்ட்ரியில நிறைய பேர் சொன்னாங்க. என்னோட உடல்வாகே பூசின மாதிரி தான் இருக்கும். ஆனா, தமிழ்ப்படங்கள்ல நடிக்கணும்கிறதுக்காக கஷ்டப்பட்டு உடம்பைக் குறைச்சேன். ஆனா, அதுக்குப்புறமும் அப்படியொண்ணும் வாய்ப்புகள் குவிஞ்சிடல. அப்படியே வர்ற வாய்ப்புகள்லேயும், 'ரன்னிங் ரோல், சிம்பதடிக் ரோல், த்ரூ அவுட் ரன்னிங் கேரக்டர்'னு புதுசு புதுசா வார்த்தைகளைப் போட்டு மயக்கிடுறாங்க. நம்பி போனா என்னோடது மூணு சீன், நாலு சீன் தான் இருக்கு.

அபூர்வ ராகங்கள் ஷூட்டிங்கில்
அபூர்வ ராகங்கள் ஷூட்டிங்கில்

கே.பி. சார் டைரக்‌ஷன்ல இப்போ வரைக்கும் நாலு படம் நடிச்சிருக்கேன். அதனால, அவர் எந்த சீன்ல என்ன எக்ஸ்பிரஷன்ஸ் எதிர்பார்ப்பார்னு எனக்குத் தெரியும். அதை, இந்தப் படத்துல உன்கூட நடிக்கிற மத்த ஆர்ட்டிஸ்ட்டுக்கும் சொல்லிக்கொடுன்னு என்கிட்ட சொல்வார். அவர் பேச்சுக்கு மரியாதைக் கொடுத்து, சொல்லிக்கொடுக்கப்போனா முகத்தைத் திருப்பிக்கிறாங்க. சரி, அது அவங்க இயல்புன்னு விட்டுடுவேன்.

நான் யார்கிட்டேயும் சான்ஸ் கேட்டுப்போறதே இல்ல. ஏன்னா, என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சினிமா ஃபீல்டுல ஒரு மரியாதை இருக்கு. அத நான் கெடுக்க விரும்பல. அப்புறம் இன்னொரு விஷயம். ஒருநாள் ராத்திரி, சினிமா ஃபீல்டுல இருக்கிற ஒருத்தர் எனக்கு போன் பண்ணி 'கதை டிஸ்க்‌ஷன் பண்ணணும். உடனே கிளம்பி வாங்க'ன்னு கூப்பிட்டார். அந்த டிஸ்கஷனை நாளைக்கு காலையில வெச்சுக்கக்கூடாதா சார்னு நான் கேட்டதுக்கு, 'உங்களுக்கு தெரியாதா இதெல்லாம்'னு இழுத்தார். அந்த டிஸ்கஷனுக்கு நான் போகல. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. என்னை பொறுத்தவரைக்கும் முப்பது வயசோட நடிக்கிறதை நிறுத்திட்டு குடும்பம், குழந்தைன்னு செட்டில் ஆகிடணும். ஒருவேளை நடிச்சாலும் சௌகார், எம்.என்.ராஜம் மாதிரி குணசித்திர வேடங்கள்ல நடிக்கணும். அப்போ தான் கதாநாயகிகள் அவங்களோட இமேஜை காப்பாத்திக்க முடியும்.''

நடிகை ஶ்ரீவித்யா
நடிகை ஶ்ரீவித்யா

இந்த போல்டான இன்டர்வியூவுக்கு அப்புறம்தான், தன்னோட 22-வது வயசுல 'அபூர்வ ராகங்கள்' படத்துல பாடகி பைரவி கேரக்டர்ல நடிச்சாங்க. அந்தப் படத்துல அவங்களுக்கு மகளா நடிச்ச நடிகைக்கு 17 வயசு. நாற்பது வயசு, ஐம்பது வயசெல்லாம் ஹீரோயின் ரோல் பண்றதுக்கு தடையே இல்லாத இந்தக் காலகட்டத்துல, இத வாசிக்கிறப்போ உறுத்தலா இருக்கலாம். அப்கோர்ஸ், அப்போ ஶ்ரீவித்யாவுக்கும் இது அப்போ சங்கடத்தைக் கொடுத்திருக்ககாம். ஆனா, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கே.பி படமாச்சே. அந்தப் படத்துல நடிக்கிறாங்க. தன்னோட காதலையும் பார்க்கிறாங்க. அது கல்யாணம் வரைக்கும் போகணும்னு ஆசப்படுறாங்க.

ஆனா, அவங்களோட அம்மா ரெண்டு பேருக்குமான வயசு வித்தியாசத்தைக் காரணம்காட்டி, 'ரெண்டு பேரும் கரியர்ல கவனத்தை செலுத்துங்க'ன்னு சொல்லிடுறாங்க. ஏற்கெனவே மலையாளப்படங்கள்ல நடிச்சிக்கிட்டிருந்த ஶ்ரீவித்யா, இந்த சம்பவத்துக்கு அப்புறம் மலையாளப்படங்கள்ல நிறைய கான்சன்ட்ரேட் பண்ண ஆரம்பிக்க, மிகப்பெரியளவுல சக்ஸஸும் ஆகியிருக்காங்க. எந்த அளவுக்குன்னா, இப்போ வரைக்கும் மலையாள ரசிகர்கள் ஶ்ரீவித்யாவோட வீடியோ இன்டர்வியூகள்ல 'ஶ்ரீவித்யா எங்க கேரளத்தோட சொத்து'ன்னு கமென்ட் பண்ற அளவுக்கு சக்ஸஸ் பண்ணியிருக்காங்க.

நடிகை ஶ்ரீவித்யா
நடிகை ஶ்ரீவித்யா

ஶ்ரீவித்யாவை கல்யாணம் பண்ணிக்கக் கேட்டு பல பேர் புரப்போஸ் செஞ்சிருக்காங்க. ஒருமுறை அவங்க அமெரிக்காவுல நடன நிகழ்ச்சி நடத்துறக்காக போனப்போ, சயின்டிஸ்ட் ஒருத்தர் தன் காதலை சொல்ல, அவருக்கும் 'நோ' மட்டுமே சொல்லியிருக்காங்க.

எல்லாரோட வாழ்க்கைப் பயணத்துலேயும் நிறைய பூக்கள் பூக்கத்தானே செய்யும். ஶ்ரீவித்யாவோட வாழ்க்கையிலேயும் இன்னொரு காதல் பூத்ததா சொல்லப்படுது. ஆனா, அதுவும் பெருசா வாசம் வீசல போல. ஏமாற்றம், வருத்தம்னு பல உணர்ச்சிகள்ல தவிச்சிக்கிட்டு இருந்தவங்க, தான் நடிச்ச தீக்கனல் படத்துல வொர்க் பண்ண ஜார்ஜ் என்பவரை கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுக்கிறாங்க. இந்தக் காதலையாவது காப்பாத்திடணும்கிற தீர்மானத்துலேயோ என்னவோ, வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்றாங்க. சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரத்துல அம்மாவுக்குக் கட்டுப்பட்டது; தவறான முடிவை எடுத்த நேரத்துல அம்மாவுக்குக் கட்டுப்படாததுன்னு ஶ்ரீவித்யா எடுத்த ரெண்டு முடிவுகள், அவங்களோட மரணம் வரைக்கும் அவங்களை நிம்மதியா வாழவே விடலைன்னுதான் சொல்லணும்.

''நான் டெலிவிஷன் தொடர்கள்ல நடிச்சப்போ, வேலையில்லாதவங்க தான் டி.வி.க்கு போவாங்கன்னு கேலி பண்ணாங்க. அதோட பவர் தெரியாம பேசுறீங்கன்னு அவங்களுக்கு பதில் சொன்னேன்''

தன்னோட திருமண வாழ்க்கைப்பத்தி ஶ்ரீவித்யா ஒரு பேட்டியில, ''ஒரு காதல் ஃபெயிலராயிடுச்சு. அதுல இருந்து மீள ஒரு கல்யாணம் செஞ்சேன். வாழ்க்கை அறுந்துபோன நூல் மாதிரி ஆகிடுச்சு. ஆனா, அந்த நேரத்துல நான் மலையாள சினிமாவுல உச்சத்துல இருந்தேன். ஆனா, என்னோட பர்சனல் லைஃப் அப்படியே கீழ இறங்கிட்டே இருந்துச்சு. அத என்னால யார் கிட்டேயும் ஷேர் பண்ண முடியல. சொன்னா, யார் அத எப்படி எடுத்துப்பாங்களோன்னு பயம்.

என்கிட்ட ஓர் இயல்பு உண்டு. எவ்ளோ பெரிய பிரச்னை வந்தாலும், நான் கல்லு மாதிரி திடமா நிப்பேன். பல்லியைப் பார்த்தா மட்டும்தான் பயப்படுவேன். என் திருமண வாழ்க்கையில வரிசைக்கட்டி பிரச்னைகளா வந்தப்போ அதையெல்லாம் பேப்பர்ல எழுதி பகவான் பாதத்துல வெச்சிடுவேன். அப்படி செஞ்சா அது சரியாகிடும்னு நம்புவேன்'' - இவ்ளோ தைரியமா இருந்தாலும் ஶ்ரீவித்யா சந்திச்ச பிரச்னைகள், அவங்க மனசை ரொம்ப ரணமாக்கியிருக்குன்னுதான் சொல்லணும்.

முப்பது வயசுல நடிப்பை நிறுத்திட்டு குடும்பம், குழந்தைன்னு செட்டிலாகணும்னு ஆசைப்பட்டவங்க, கணவர் வற்புறுத்தலால நடிப்பை தொடர்ந்தாங்க. மகளோட கல்யாணத்துல கடைசி வரிசையில உட்கார்ந்து அழுதுட்டு வந்த அவரோட அம்மாவுக்கு மகள் தற்கொலை முடிவுல இருக்கிறது தெரியவர, மகளைக் காப்பாத்தி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்திடுறாங்க.

தான் நடிச்சு சேர்த்த சொத்தைக் கேட்டு கோர்ட்ல கேஸ் போடுறாங்க ஶ்ரீவித்யா. கூடவே நடிப்பையும் தொடர்றாங்க. கொஞ்சம் தேறி வர்ற நேரத்துல, அவங்களோட அம்மா கேன்சர்ல இறந்துபோறாங்க. கணவர்கிட்ட இருந்து டைவர்ஸ் கிடைக்கல; உழைச்சு சம்பாதிச்ச காசும் கிடைக்கல; எல்லாத்துக்கும் மேல அம்மாவும் இல்ல. அந்தக் காலகட்டத்துல மனசளவுல சுக்குநூறா ஆகியிருக்காங்க ஶ்ரீவித்யா.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில்

உடைஞ்ச கண்ணாடித்துண்டுகளை ஒட்டி வெச்ச மாதிரி, சினிமா உண்டு, வீடு உண்டுன்னு வாழ ஆரம்பிச்சவங்களுக்கு, 35 வயசுல அவங்க தொலைச்ச சொத்துக்களை கோர்ட் மீட்டுக் கொடுக்குது. படங்கள், சீரியல்னு நடிப்புல மனசுல அமைதிப்படுத்திக்கிட்டு வாழ ஆரம்பிச்சவங்களுக்கு அதுவும் நிலைக்கல. 2003-ல பிரெஸ்ட் கேன்சர் இருக்கிறதும் அது முதுகுத்தண்டு வரைக்கு பரவி இருக்கிறதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதுக்கப்புறம் நடந்ததை உலகமே அறியும். 2006-ல அவங்களோட உடலை அரசு மரியாதையோட, கேரள அரசு அனுப்பி வெச்சது.

40 வருடங்கள்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு 800 படங்கள் வரைக்கும் ஶ்ரீவித்யா நடிச்சதா சொல்லப்படுது. இதுல மலையாளப்படங்கள்தான் அதிகம். ''நைட் ஷூட்டிங் முடிச்சு காலையில 6 மணிக்கு வீட்டுக்குப் போயி, மறுபடியும் 9 மணிக்கு அடுத்தப் படத்தோட ஷூட்டிங்க்கு கிளம்பிடுவேன். மலையாளத்துல மேக்கப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள் பூசிக்குளிச்சா அடுத்த ஷூட்டிங் போக நான் ரெடியாகிடுவேன்''னு பேட்டி ஒண்ணுல சொல்லியிருக்கிற ஶ்ரீவித்யா, தான் சந்திச்ச சில அவமானங்களையும்கூட ஷேர் பண்ணியிருக்கார்.

ஆனந்தம் படத்தில்
ஆனந்தம் படத்தில்

''அந்தப் பொண்ணுக்கு ஹெட் லைட் மாதிரி ரெண்டு கண்ணு மட்டும்தான் இருக்குன்னு ஜெமினிகணேசன் அங்கிள் ஒருமுறை என்னைக் கிண்டல் பண்ணியிருந்தார். ஆனா, அவரே அபூர்வ ராகங்கள் 100 நாள் ஃபங்ஷன்ல என் கண்கள்ல வெளிப்பட்ட நடிப்பைப் பாராட்டினார்.

நான் தமிழ்ல செகண்ட் ஹீரோயினா நடிச்சிக்கிட்டிருந்த காலத்துல, ஒரு புரொடியூசர் நான் நடிச்சதுக்கு தர வேண்டிய பணத்தைக் கேட்டதுக்கு 'உனக்கு பணம் தரணும்'னு எனக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லைன்னு சொன்னார். அதே நபர் நான் மலையாளத்துல வளர்ந்தப்புறம் 'அம்மா நீங்க எனக்கு ஒரு படம் பண்ணித் தரணும்'னு கேட்டார். அப்போ, அவர் எனக்கு சொன்ன 'எனக்கு நிர்பந்தம் இல்லைங்கிற' வார்த்தை மனசுக்குள் வந்துச்சு. ஆனா, நான் அத சொல்லல. இந்த மாதிரி நான்பட்ட அவமானங்கள்தான், மத்தவங்களை சின்ன நடிகை, பெரிய நடிகைன்னு பிரிச்சுப்பார்த்து நடத்தக்கூடாதுங்கிறதை சொல்லிக் கொடுத்துச்சு''ன்னு சொல்றாங்க.

ஶ்ரீவித்யா
ஶ்ரீவித்யா

1990-கள்ல இருந்து ஶ்ரீவித்யா சீரியல்கள்லேயும் நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ''நான் டெலிவிஷன் தொடர்கள்ல நடிச்சப்போ கூட என்னை நிறைய பேர் விமர்சனம் செஞ்சாங்க. வேலையில்லாதவங்க தான் டி.வி.க்கு போவாங்கன்னு கேலி பண்ணாங்க. அதோட பவர் தெரியாம பேசுறீங்கன்னு அவங்களுக்கு பதில் சொன்னேன்''னு சொல்றவங்க, பெண் குழந்தைகளை பாதுகாக்க அரசு எடுத்த முயற்சிகளுக்கு உறுதுணையா,

'ஆணா பொண்ணா பொறந்தது

அது தான் இங்க முதல் சேதி

ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட

பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன' என்கிற பாட்டுக்கு தூர்தர்ஷன்ல நடிச்சிருப்பாங்க.

தமிழ், மலையாளம்னு ரெண்டு மொழிப்படங்கள்லேயும் இதுவரைக்கும் பத்துக்கும் மேற்பட்ட முறை சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகைக்கான விருதை வாங்கியிருக்கிறாங்க 'கலைமாமணி' ஶ்ரீவித்யா.

நடிகை ஶ்ரீவித்யா
நடிகை ஶ்ரீவித்யா

டைட்டான குளோசப்பிலும் ஜொலிச்ச அழகு; பாட்டு நடனம்னு எத்தனை திறமை; அந்த டிஸ்கஷனை காலையில வெச்சுக்கோங்க என்ற துணிச்சல்... அனைத்தும் வெறும் 53 வயதில் மண்ணுக்குள் சென்றுவிட்டது. தமிழ் சினிமாவோட அபூர்வ ராகம் என்னிக்கும் ஶ்ரீவித்யா தான். வி மிஸ் யூ வித்திம்மா..!

(நாயகிகள் வருவார்கள்..!)

Tamannaah: `மைசூர் சாண்டல் சோப் பிராண்ட் அம்பாசிடராக தமன்னா..' கன்னட அமைப்புகள் எதிர்ப்பு - ஏன்?

மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் குறித்து இணையவாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருக... மேலும் பார்க்க

மலைகளின் இளவரசி கொடைக்கானலி ல் கற்றாடி திருவிழா... கண்டு களிக்கும் சுற்றுலா பயணிகள்! - Album

ராட்சத காத்தாடி திருவிழாராட்சத காத்தாடி திருவிழாராட்சத காத்தாடி திருவிழாராட்சத காத்தாடி திருவிழாராட்சத காத்தாடி திருவிழாராட்சத காத்தாடி திருவிழாராட்சத காத்தாடி திருவிழா மேலும் பார்க்க

``அம்பேத்கர் வழியில் சாதியை ஒழிக்கணும்னு வெறியோட இருக்கேன்!’’ - `நீயா நானா’ தினகரன் பேட்டி

“நாங்க எல்லாம் ராஜ பரம்பரை...என சாதிப் பெருமை பேசி ராஜநடை என்கிற பெயரில் நடந்து காண்பித்து ட்ரோல் ஆன இளைஞர் தினகரன், தற்போது, ‘சூப்பர்டா தம்பி...’ என பாராட்டும் அளவுக்கு, உண்மையாகவே கம்பீர நடை போட ஆரம... மேலும் பார்க்க

Hogenakkal: கோடை விடுமுறையில் ஒரு கொண்டாட்டம்; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album

கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒகேனக்கல்கோடை விடுமுறை ஒக... மேலும் பார்க்க

Lijomol : `அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை; ஆனால்..!' - லிஜோமோல் ஜோஸ் ஓப்பன் டாக்

'சிவப்பு, மஞ்சள், பச்சை', 'ஜெய் பீம்' படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். மலையாளம், தமிழ் இரண்டிலும் தனக்கான தேர்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீ... மேலும் பார்க்க

படைத்தலைவன்: ”கேப்டனும் என் மகனும் இதை ஆசைப்பட்டுவிட்டார்கள், நிச்சயமாக..." - பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படைத்தலைவன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் அன்பு, சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ரா... மேலும் பார்க்க