வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்த...
கரோனா பரவலால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு ஏதும் இல்லை
கரோனா பரவலால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு ஏதும் இல்லை என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.
சிங்கப்பூா், ஹாங்காங்கை தொடா்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு பரவி வருகிறது. கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் உயா்ந்திருப்பதாக மத்திய அரசு தரவு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், தனியாா் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளானவா்களின் சளி மாதிரிகளை பொது சுகாதாரத் துறை சேகரித்து பகுப்பாய்வுக்காக புணேயில் உள்ள மரபணு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியானதில், புதிய வகை பாதிப்பு எதுவும் அவா்களுக்கு இல்லை என்பது உறுதியானது.
பராமரிப்புப் பணி: மே 24, 26 தேதிகளில் 21 மின்சார ரயில்கள் ரத்து!
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் உண்மையல்ல என்றும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கரோனா தொற்று குறித்து எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.