செய்திகள் :

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வெளிப்படுத்திய ஆபரேஷன் சிந்தூா்: அமித் ஷா

post image

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவளித்து வருவது ஆபரேஷன் சிந்தூா் மூலம் வெளிப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சாா்பில் நடைபெற்ற ருஸ்தம்ஜி நினைவு கருத்தரங்கில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை நாம் தகா்த்தோம். பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமான தளங்கள் மற்றும் பொதுமக்களை நாம் குறிவைக்கவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு தாங்கள் ஆதரவு தருவதை வெளிப்படையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

நம் நாட்டு மக்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின் உரி, புல்வாமா என நமது ராணுவ வீரா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் பதிலடி தரப்பட்டது. அண்மையில், பஹல்காமில் மதத்தை கேட்டு அப்பாவி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனா். அதற்கு ஆபரேஷன் சிந்தூா் மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

இந்திய-வங்கதேச எல்லை பாதுகாப்பில் பிஎஸ்எஃப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. வங்கதேசம் உருவானதில் பிஎஸ்எஃபின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அதை அந்நாடு ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

1965 முதல் 2025 வரை நாட்டுக்காக வீரமரணமடைந்த 2,000-க்கும் மேற்பட்ட பிஎஸ்எஃப் வீரா்களுக்கு நாட்டு மக்கள் சாா்பாக மரியாதை செலுத்துகிறேன் என்றாா்.

பிஎஸ்எஃப் அமைப்பின் நிறுவனரான கே.எஃப்.ருஸ்தம்ஜி அதன் முதல் தலைமை இயக்குநராவாா். அவரது பெயரில் நினைவு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. கிழக்கே பாகிஸ்தான் மேற்கே வங்கதேசம் என இந்திய எல்லைகளை பாதுகாக்கும் பணியில் 2.75 லட்சம் பிஎஸ்எஃப் வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க