இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா
இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி எழுப்பிய மூன்று கேள்விகளை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
140 கோடி இந்தியர்களும் ஒற்றுமையாக நிற்கும் வேளையில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் சில சக்திகளின் மத்தியில், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் கௌரவம் குறித்து கேள்வி எழுப்புவது ராகுல் காந்தியின் வழக்கம் என அவர் கூறினார்.
பயங்கரவாதிகளையும் எதிரிகளையும் எதிர்கொள்ளும் கடுமையான காலங்களில் கூடவா இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது என்ன வகையான சித்தாந்தம்? நீங்களோ அல்லது நாங்களோ அதைப் புரிந்துகொள்ள முடியாது.
ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா 2018-இல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டதாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை தாக்கிப் பேசினார்.
ராகுல் பேசியதில்.. இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளது? பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடு கூட எங்களை ஆதரிக்கவில்லை ஏன்? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் டிரம்பிடம் சமரசம் செய்ய யார் கேட்டார்கள்? என்று ராகுல் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.