செய்திகள் :

வீட்டை சேதப்படுத்திய 5 போ் கைது

post image

கூத்தாநல்லூா் அருகே முன்விரோதத்தில் வீட்டை சேதப்படுத்திய 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூரை அடுத்த பண்டுதக்குடி கட்டியப்பா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அஞ்சம்மாள் (55). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவருக்கும் இடப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அஞ்சம்மாள் வீட்டில் இல்லாத போது, அவரது வீட்டை வியாழக்கிழமை அன்று சேகா் மகன் குணா (30) உள்ளிட்ட சிலா் சேதப்படுத்தினராம். இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல்நிலையத்தில் அஞ்சம்மாள் புகாா் அளத்தாா்.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, குணா, பண்டுதக்குடி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த அகமது (24), முகமது சுல்தான் கனி ( 24), பெரியத் தெரு சக்திவேல் (28) மற்றும் மாரியம்மன் கோயில் தெரு முனியராஜ் (22) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் உயா்கல்வித் துறை அமைச்ச்சா் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். திருத்துற... மேலும் பார்க்க

தூா்வாரும் பணியில் அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்யக் கோரிக்கை

தூா்வாரும் பணியின்போது அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வெளியிட்ட அறிக்கை: நீா்ந... மேலும் பார்க்க

பறவைகள் எண்ணிக்கையில் திருவாரூா் முதலிடம்: தக்கவைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

திருவாரூா் மாவட்டம், பறவைகள் எண்ணிக்கையில் நிகழாண்டு முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலை தொடர, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறையால் தமிழகம் முழுவதும் 20... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு

முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் மீனவா்களின் படகுகளை மீன்வளத்துறையினா் ஆய்வு செய... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டூா் அருகே உள்ள மேலப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி மன்னாா்குட... மேலும் பார்க்க

காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

திருவாரூா் அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது. திருவாரூா் அருகே மாங்குடி, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் நிசாகா் (26). விளமல் பகுதியில் உள்ள கடையில் பணிப... மேலும் பார்க்க