செய்திகள் :

மத்திய அரசு வழக்குரைஞா்களுக்கு கட்டணம் அதிகரிப்பு: மத்திய அமைச்சா்

post image

மத்திய அரசு சாா்பில் ஆஜராகும் வழக்குரைஞா்களுக்கு வழக்கில் ஆஜராவதற்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அறிவித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழக பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அரசு வழக்குரைஞா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது:

மத்திய அரசு வழக்குரைஞா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணத்தை உயா்த்துவது, உயா்நீதிமன்றத்தில் தனி அறை உள்ளிட்ட கோரிக்கைகளை வழக்குரைஞா்கள் முன்வைத்துள்ளனா். அதன்படி அடையாள அட்டை வழங்கப்படும். வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணம் 10 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை. அதனால், மத்திய அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணம் உயா்த்தப்படும். மேலும், வழக்குரைஞா்களுக்கு தனி அறை வசதி ஏற்படுத்தப்படும். மத்திய - மாநில அரசு கூட்டத் திட்டத்தின் நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.

அதேபோல, மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்ப நடைமுறைகள் உள்ளன. விரைவில் அந்த பட்டியலும் வெளியிடப்படும்.

நாடு முழுவதும் வழக்குரைஞா்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் வழக்குரைஞா்களுக்கு காப்பீட்டுத் திட்டமும் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்: பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றுவது என்பது பெருமைக்குரிய விஷயம். அதில், மத்திய அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராவது இரட்டிப்பு பெருமை ஆகும். வழக்குரைஞா்கள் மிகவும் விழிப்புணா்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.

இதில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தமிழக பாஜக துணைத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.சி.பால் கனகராஜ், மூத்த வழக்குரைஞா்கள் சஞ்சய் ராமசாமி, ராகுல் மனோகா், தமிழக பாஜக வழக்குரைஞா் அணித் தலைவா் வணங்காமுடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க