தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் த...
விரிகோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த ரயில்வே கிராஸிங் வழியாக கருங்கல், தக்கலை, குளச்சல், திங்கள்சந்தை, கிள்ளியூா், பள்ளியாடி, கொல்லஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு அரசுப் பேருந்துகள், தனியாா் வாகனங்கள் இரு வழியிலும் சென்று வருகின்றன. இந்த ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால், இருபுறமும் வாகனங்கல் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், பணிகளுக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவியா், நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்ட நேரத்துத்துக்குச் செல்ல இயலாமல் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பல்வேறு கட்சியினா் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக மத்திய-மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.