செய்திகள் :

பிரிட்டிஷ் குடியுரிமை கோரும் அமெரிக்கர்கள்! புது டிரண்ட்?

post image

பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில், இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்கள் குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்ததாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம்வரையில் மட்டும் 6,618 அமெரிக்கர்கள், பிரிட்டன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். இது, பதிவுகள் தொடங்கப்பட்ட 2004 ஆம் ஆண்டில் இருந்து அதிகளவிலான வருடாந்திர எண்ணிக்கை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு இடையில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பெறப்பட்டதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது. இதுவும், எந்தவொரு காலாண்டிலும் பெறாத அதிக எண்ணிக்கையே.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து, பிரிட்டன் செல்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆலோசனைகளையும், இதுவரையில் இல்லாத அளவில், அதிகமானோர் பெற்றதாக குடிவரவு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் மனைவி, பெற்றோர், குடும்பத்தினரைக் காரணமாகக் கொண்டுதான் பெரும்பாலானோர் குடியேறிய விரும்பியதாகவும், தொழிலாளர்களுக்கான தற்காலிக விசாக்களுடன் பிரிட்டனில் குடியேற சிலர் விரும்பியதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இருப்பினும், டிரம்ப்பின் ஆட்சியால்தான் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடியேற முயல்வதாக சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஐபோன் மட்டுமில்லை; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!

ஐபோன்களுக்கு வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருள்கள் அனைத்துக்கும் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, டிரம்ப் தெரிவித்ததாவ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷிய தாக்குதல்கள்: 12 பேர் பலி

உக்ரைன் முழுவதும் ஒரே இரவில் ரஷிய நிகழ்த்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர். கிவ்வின் மேற்கே உள்ள சைட்டோமைரில் மூன்று குழந்தைகளும், தெற்கு நகரமான மைகோலைவில் 70 வயதுடைய ஒருவர... மேலும் பார்க்க

முகமது யூனுஸ் பதவி விலகமாட்டாா்!

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகா் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராஜிநாமா ... மேலும் பார்க்க

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா்.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள்... மேலும் பார்க்க

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க