ஓடிடியில் சல்மான் கானின் சிக்கந்தர்!
சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம் ஓடிடியில் இன்று(மே 25) வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் காஜல் அகர்வால், சத்யராஜ், ஷர்மன் ஜோஹி, பரடீக் பாபர், அன்ஜினி தவான், ஜதின் சர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

நீண்டகாலமாக ஹிட் இல்லாமல் இருக்கும் சல்மான் கானுக்கு சிக்கந்தர் திரைப்படம் வெற்றியைக் கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் ரூ. 190 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த நிலையில், சிக்கந்தர் திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: குறுகிய காலத்தில் நிறைவடைந்த புன்னகைப் பூவே தொடர்!