`12 ஆண்டுகளாக பெண்ணுடன் தொடர்பு' - ஃபேஸ்புக் பதிவால் மகனை கட்சியிலிருந்து நீக்கி...
விக்ராந்த் நடித்த வில் பட டீசர்!
நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவான வில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ராந்த் 10 ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகராக வரும் அளவிற்குப் பெரிதாகப் பேசப்பட்டவர். நாயகனாக அவர் நடித்த படங்கள் சரியான வெற்றியைப் பெறாததால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
அப்படி, விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் நடித்து கவனம் பெற்றார்.
இறுதியாக, இவர் நடித்த லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் தோல்விப் படமாக அமைந்தது.
இந்த நிலையில், சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால் முன்னணி நடிகராகவும் விக்ராந்த் சிறப்புத் தோற்றத்திலும் நடித்த ’வில்’ (Will) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இப்படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.