செய்திகள் :

Tollywood: ``நன்றியுணர்வே இல்லை" - திரைத் துறையை சாடும் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

post image

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாணும் பொறுப்பேற்றனர்.

இதற்கிடையில், ஆளும் அரசுக்கும் திரைத் துறைக்கும் மத்தியில் மோதல் போக்கு இருப்பதாக பேசப்பட்டது.

Tollywood Heros

அதை உறுதிப்படுத்தும் விதமாக சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆகிறது. ஆனால் ஆந்திர திரையுலகினர் இன்னும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவில்லை.

இந்த புறக்கணிப்பு பவன் கல்யாணை வெளிப்படையாக விரக்தியடையச் செய்துள்ளது. அதனால், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், `` தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும், திரைப்படத் துறையின் பிரதிநிதிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவில்லை. திரைத் துறைக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்குவது, திரைப்படத் துறையை மேம்படுத்துவது, திரைப்பட தயாரிப்பாளர்களின் மரியாதை குறையாமல் பார்த்துக் கொள்வது உள்பட அரசு இந்தத் துறைக்காக யோசித்துக்கொண்டிருக்கிறது.

பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு

ஆனால், இந்தக் துறையில் இருப்பவர்களுக்கு ஆந்திரப் பிரதேச அரசு மீது குறைந்தபட்ச மரியாதையோ, நன்றியுணர்வோ கூட இல்லை. திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்கள் வெளியாகும் போது மட்டுமே வருவார்கள். ஆனால், திரைத் துறையை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள்.

அனைத்து திரைப்படத் தயாரிப்பாளர்களும் ஒன்றுபட வேண்டும் என்று நான் பரிந்துரைத்த பிறகும், இந்த அலட்சியம் தொடர்கிறது. முந்தைய YSRCP அரசின் போது தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை திரையுலகம் மறந்துவிட்டது." எனக் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

"நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என..." - சொல்கிறார் தயாரிப்பாளர் சமந்தா!

சமந்தா 'சுபம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் சமந்தா ஒரு க... மேலும் பார்க்க

``படித்துக்கொண்டே நடிக்கிறேன்... தெலுங்கு கற்றுவருகிறேன்" - லவ் டுடே நடிகை இவானா

'லவ் டுடே' படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் இவானா. தொடர்ந்து பலத் தமிழ் படங்களில் நடித்துவரும் இவர், தற்போது ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள "சிங்கிள்" படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவிருக்கி... மேலும் பார்க்க

Allu Arjun: ``நான் நடிச்சதுல 18 படம் பாக்ஸ் ஆபிஸ்ல..'' - அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குநர் அட்லியுடன் இணைந்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்... மேலும் பார்க்க

Vijay Devarakonda: `பழங்குடிகளை அவமதிக்கும் கருத்து' - விஜய் தேவரகொண்டா மீது வழக்கறிஞர் புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தின் புரோமோஷன் விழா ஏப்ரல்... மேலும் பார்க்க

HIT 3 Review: ஒரு கன்டெய்னர் துப்பாக்கி; 2 லாரி கத்தி; பல லிட்டர் ரத்தம்; ஹிட்டடிக்கிறதா இந்த ஹிட்?

அர்ஜுன் சர்கார் (நானி), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ட்ரிட்டான போலீஸ் அதிகாரி. இவர் HIT என்கிற Homicide Intervention Team என்கிற குற்றவாளிகளைத் தண்டிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையிலும் இருக்கிறார். ... மேலும் பார்க்க

Allu Arjun: `வயது ஏறிக்கொண்டே போகிறது, அதனால்..!' - WAVE மாநாட்டில் நடிகர் அல்லு அர்ஜூன்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்... மேலும் பார்க்க