``உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடு இந்தியா; ஜப்பானை முந்திவிட்டோம்..'' - நிதி ஆயோக் CEO!
``இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாகியிருக்கிறது" என அறிவித்துள்ளார் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம்.
நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டம் நிறைவுபெற்றதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலகின் புவிசார் அரசியலும் பொருளாதார சூழ்நிலையும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறதெனத் தெரிவித்தார்.

4 டரில்லியன் டாலர் பொருளாதாரம்
"நாம்தான் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடு. நாம் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறோம்." எனக் கூறினார் அவர்.
"இது என்னுடைய தரவுகள் அல்ல, IMF -ன் தரவுகள். இந்தியா இன்று ஜப்பானை விட பெரிய பொருளாதாரமாக வளர்ந்துவிட்டது" என சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி பேசினார். இத்துடன் இந்தியா விரைவில் ஜெர்மனியை விட பெரிய பொருளாதார நாடாக வளர முடியும் என்றும் கூறினார்.
ஜெர்மனியை முந்துவோம்!
தொடர்ந்து பேசிய சுப்ரமணியம், "இப்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள்தான் நம்மை விட முன்னிலையில் இருக்கின்றன. நாம் இப்போதிருக்கும் சிந்தனைகளிலும் திட்டங்களிலும் உறுதியாக இருந்தால் இன்னும் இரண்டரை அல்லது மூன்று ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாகலாம்." என்றார்

இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடுகள்
IMF வெளியிட்ட உலக பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின் (World Economic Outlook Report) ஏப்ரல் பதிப்பு, 2026 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தோராயமாக 4,187.017 பில்லியன் டாலர்களைத் தொடலாம் எனக் கூறுகிறது. இது ஜப்பானின் தோராயமாக கணக்கிடப்பட்ட 4,186.431 பில்லியன் டாலர்களை விட சற்று அதிகம்.
மேலும் IMF அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என கணித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2025 நிதியாண்டில் 6.2% மற்றும் 2026ல் 6.3% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலான நாடுகளை விட அதிகம்.
"PM Modi asked states to remove bottlenecks to attract investors, encourage manufacturing and generate jobs."
— sumit (@sumit45678901) May 25, 2025
1. US
2. China
3. Germany
4. India
5. Japan
BaharatOVERTAKES Japan to become the world's 4th largest economy, confirms NITI Aayog CEO Subrahmanyam. pic.twitter.com/WaGC7lbUlk
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb