சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள்! தமிழ்நாடு அரசு
கல்விக் கனவு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் காணுவதாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தமிழறிஞர் கலைஞர், அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார்.
அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் உறுப்பினர்கள் (Official Members), 13 (10 திருநங்கைகள், 1 திருநம்பி, 1 இடைபாலினர் மேலும் 1 பெண் உறுப்பினர்) அலுவல் சாரா உறுப்பினர்களுடன் (Non Official Members) 2025- ஆம் ஆண்டில் திருத்தியமைத்தார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு
திருநங்கைகள் நலவாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.