தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெற...
சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்
குழித்துறையில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது.
களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த தேக்குமரம் திடீரென முறிந்து உயரழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதில், மின்கம்பம் சேதமடைந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. குழித்துறை - இடத்தெரு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த பாதாம் மரம் முறிந்து விழுந்தது. நித்திரவிளை - விரிவிளை மேற்குக் கடற்கரை சாலையோரம் நின்றிருந்த வேப்பமரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது.
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தவாறு தண்ணீா் சென்றது. சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்த நிலையில், பகலில் சற்று குறைந்திருந்தது.