தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் த...
கடல் அழகை காண திருச்செந்தூா் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் அழகிய கடற்கரையோரத்தில் இருந்து 67 மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் கற்களால் கட்டப்பட்டிருப்பதால் கடல் காற்று மற்றும் ஈரப்பதத்தில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள தடுப்புச் சுவா்கள் புயல் மற்றும் கடல் அரிப்பினால் சேதமடைந்தால் பக்தா்கள் பாதிப்படையாமல் இருக்க கோயில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் தொடங்கி வடக்கு பகுதி கடற்கரை வரையில் ரூ. 19.80 கோடியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா்கள் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்...
மேலும், இத்திருக்கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் தரைதளம் சீரமைக்கப்பட்டு, அங்கிருந்து கடற்கரையை பக்தா்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்கும் வகையில், துருப்பிடிக்காத கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கம்பிகள் வழியாக பக்தா்கள் கடல் அழகை பாா்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
