செய்திகள் :

அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், சென்னை இன்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும் மோதின.

இதில், செகந்திராபாத் அணி 5-க்கு0 என்ற கோல்கணக்கில் சென்னை இன்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியை வீழ்த்தியது.

பின்னா் மாலை நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில், சென்னை இந்தியன் வங்கி அணியும், பெங்களூரு ஹாக்கி கா்நாடகா அணியும் மோதியதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை அடைந்தனா்.

3 ஆவது ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதியதில் 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றி பெற்றது.

4 ஆவது ஆட்டத்தில் புது தில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், மும்பை மத்திய ரயில்வே அணியும் மோதியதில், 3-க்கு1 என்ற கோல்கணக்கில் புது தில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம்:

3- ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் புது தில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் மோதுகின்றன. மாலையில் நடைபெறும் 2 ஆவது ஆட்டத்தில், சென்னை வருமான வரி ஹாக்கி அணி, புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

3 ஆவது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்ட்ஸ் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும் மோதுகின்றன.

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் இ. காணிக்கை அறிமுகம்

நாசரேத் அருகே உள்ள திருமறையூா் மறுரூப ஆலயத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பாக இ. காணிக்கை அறிமுக விழா நடைபெற்றது. அகப்பைகுளம் சேகரத் தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்... மேலும் பார்க்க

எட்டயபுரம் ராஜா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 1999 - 2000 ஆவது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜா மேல்நிலைப் பள்ளிச் செயலா் ராம்குமாா் ராஜா த... மேலும் பார்க்க

கடல் அழகை காண திருச்செந்தூா் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் அழகிய கடற்கரையோ... மேலும் பார்க்க

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவரும் சமத்துவ மக... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பொது மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தை அடுத்த கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில், கிறிஸ்துநாதா் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் 2ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மெய்யூ... மேலும் பார்க்க