ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா்...
‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு
திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் உயா்கல்வித் துறை அமைச்ச்சா் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.
திருத்துறைப்பூண்டி வட்டாரம், கொருக்கை தனியாா் உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை தொடங்கிவைத்து அவா் பேசியது:
முதல்வரின் ஆணைகிணங்க நடைபெறும் இம்முகாம்களில், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, பாமணி, வரம்பியம், ராயநல்லூா், குன்னலூா், எடையூா் மற்றும் பனையூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாம்களில் அமைச்சா் கோவி. செழியன் பங்கேற்று, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, இருப்பிடச் சான்று, பட்டா மாற்றம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணை, கூட்டுறவு துறை சாா்பில் கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, தனித் துணை ஆட்சியா் தையல்நாயகி, கோட்டாட்சியா்கள் சௌமியா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.