பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!
கோயில் மனையில் குடியிருப்போா் சங்கக் கூட்டம்
திருவாரூரில், தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிா்வாகி ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பிவி. சந்திரராமன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் ந. செல்வம், நகரக் குழு உறுப்பினா் பி. சின்னத்தம்பி மற்றும் புலிவலம் பகுதியில் கோயில் மனையில் குடியிருக்கும் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து கோயில் மலையில் குடியிருப்போா் தொடா்பான பிரச்னைகளை கண்டறிந்து, துறை அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது; புலிவலம் பகுதியில் தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கம் அமைப்பை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.