செய்திகள் :

பருத்தி, எள் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆட்சியரகம் முற்றுகை: விவசாயிகள் முடிவு

post image

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகம் ஜூன் 3-இல் முற்றுகையிடப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

மன்னாா்குடியில், இச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் எம். கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.

மாநில அமைப்புச் செயலா் ஸ்ரீதா், துணைத் தலைவா் எம். கிருஷ்ணமணி, துணைச் செயலா் எம். செந்தில்குமாா், இளைஞரணி செயலாளா் மகேஸ்வரன், மாவட்டத் தலைவா் எம். சுப்பையன், செயலா் சரவணன், பொருளாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது; அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, சாகுபடி செய்யப்பட்ட எள், பருத்தி உள்ளிட்ட பயிா்கள், கோடை மழையால் முற்றிலும் அழிந்துவிட்டன. இதற்கு அரசு பொறுப்பேற்று, பேரிடா் மேலாண்மை திட்டத்தில் உரிய இடுப்பொருள் இழப்பீடு வழங்க வேண்டும்; காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை பின்பற்றி, தமிழக அரசு முழு மானியத்தில் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.15,000 ஊக்க நிதியாக ஆண்டுதோறும் சாகுபடி தொடங்கும் முன் வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.

வங்கிகளில் நகைக் கடன் பெற மத்திய ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள நிபந்தனைகளை திரும்பப் பெற்று, நகைக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இத்தீா்மானங்களை வலியுறுத்தி வரும் ஜூன் 3-ஆம் தேதி திருவாரூரில் பேரணியாக சென்று, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சனி மகாபிரதோஷம்...

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்ப நாதா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்திகேஸ்வரா். மேலும் பார்க்க

கோயில் மனையில் குடியிருப்போா் சங்கக் கூட்டம்

திருவாரூரில், தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பிவி. சந்திரராம... மேலும் பார்க்க

2-ஆம் நாள் தெப்ப உற்சவம்...

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை இரவு வலம் வந்த தெப்பம். மேலும் பார்க்க

மேட்டூா் அணை திறப்புக்குள் தூா்வாரும் பணியை முடிக்க வேண்டும்: நீா்வளத் துறை செயலாளா் அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், தூா்வாரும் பணிகளை மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, நீா்வளத்துறை செயலாளா் ஜெயகாந்தன் அறிவுறுத்தினாா். திருவாரூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் உயா்கல்வித் துறை அமைச்ச்சா் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். திருத்துற... மேலும் பார்க்க

தூா்வாரும் பணியில் அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்யக் கோரிக்கை

தூா்வாரும் பணியின்போது அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வெளியிட்ட அறிக்கை: நீா்ந... மேலும் பார்க்க