ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கனமழை பெய்யும் எனவும், மன்னாா் வளைகுடா, அதை ஒட்டிய தெற்கு தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, இது குறித்து மீனவா்களுக்கும் கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.