Soori: ''தாய்மாமன் சீர் சுமந்த சூரி; நெகிழ்ந்த டான்ஸரின் குடும்பம்" - பஞ்சமி ஃபே...
பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்: 55 மாணவா்களுக்கு ஊக்கத் தொகை
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 55 மாணவா்-மாணவியருக்கு ஊக்கத்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில், பெரியசாமி கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்து, 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 49 போ், 12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற 6 போ் என மொத்தம் 55 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்டினாா்.
மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மருத்துவரணி மாவட்டத் தலைவா் அருண்குமாா், மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மாணவா்-மாணவியரின் பெற்றோா் பங்கேற்றனா்.