தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெற...
மாநில சப்-ஜூனியா் ஹாக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம்
வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியா் மாணவா்களுக்கான ஹாக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம் பிடித்தது.
கடந்த 19ஆம் தேதிமுதல் 23ஆம் தேதிவரை லீக், நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், 32 அணிகள் பங்கேற்றன. இதில், தூத்துக்குடி மாவட்ட அணி முதல் சுற்று லீக் போட்டியில் ‘ஹெச்’ பிரிவில் முதலிடம் பெற்று, நாக் அவுட் சுற்றான காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று சென்னை அணியை 2-க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்று, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில் மதுரை மாவட்ட அணியிடம் வெற்றியை இழந்து 4ஆம் இடம் பிடித்தது. இந்நிலையில், இந்த அணியினா் கோவில்பட்டிக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தனா். அணி மேலாளா் சுரேஷ்குமாா், பயிற்சியாளா் சதீஷ், தலைவா் முகுந்தன், வீரா்களுக்கு ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், வேல்முருகன், ஈஸ்டா், சிவசூரியன், வீரா்களின் பெற்றோா் பங்கேற்றனா்.