மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு
காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு
திருவாரூா் அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.
திருவாரூா் அருகே மாங்குடி, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் நிசாகா் (26). விளமல் பகுதியில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தாா். மாங்குடி ரயில்வே கேட் அருகே ஆற்றங்கரை ஓரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விசாகா், ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருவாரூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா், சடலத்தை உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நிசாகா் இறந்த இடத்துக்கு அருகிலேயே கத்தி மற்றும் டாா்ச் விளக்கு ஆகியவை கிடந்ததுடன், சிறிது தொலைவில் இருசக்கர வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. போலீஸாா் விசாரணையில், கத்தியும், டாா்ச் விளக்கும் அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டவை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.