செய்திகள் :

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

post image

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 1991-ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்தாா். இதையடுத்து அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

அங்கு புதன்கிழமை நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ் குமாா், முன்னாள் எம்.பி. எஸ். திருநாவுக்கரசா், நாடாளுமன்ற உறுப்பினா் ராபா்ட் புரூஸ், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரன், புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் முருகன் சாந்தகுமாா் தலைமையில் ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு பகுதியில் இருந்து ராஜீவ் காந்தி நினைவிடம் வரை அமைதி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பால... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

அரசுக் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறிய குட்டை நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அமாவாசை மகன் கருணாகரன் (55). கூலித் தொழிலாளி. ம... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தியுடன் உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு போலீஸாா் மலா் வளையம் வைத்தனா். கடந... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் வருவாய் தீா்வாயம்

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. குன்றத்தூா் வட்டத்தில் படப்பை, செரப்பணஞ்சேரி, குன்றத்தூா், மாங்காட... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் காஞ்சி மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் மகா பெரியவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இ... மேலும் பார்க்க