நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த நிலையில் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலா இன்று திறந்துவைத்தார்.
தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசல், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.
அதோடு, ஜார்க்கண்டில் மறுசீரமைக்கப்பட்ட மூன்று ரயில் நிலையங்களைப் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
குந்தி மாவட்டத்தில் உள்ள கோவிந்த்பூர் சாலை ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் மாநில நிலம் மற்றும் வருவாய் அமைச்சர் தீபக் பிருவா, முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, டோர்பா உறுப்பினர் சுதிவ்யா குடியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்கிழக்கு ரயில்வேயின் ராஞ்சி பிரிவின் கீழ் ஹதியா-ரூர்கேலா பிரிவில் அமைந்துள்ள கோவிந்த்பூர் சாலை ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு சுமார் ரூ.6.65 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.