Cannes 2025: கான் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் & ஜான்வி கபூர்; ரெட் கார்பெட் ...
ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இதனால் இருநாட்டுத் தரப்பிலும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை இந்தியா அழித்தது. அதற்குப் பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இறுதியா இருநாட்டு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது.
இந்த, நிலையில் காஷ்மீர் எல்லையில் பதற்றம் காரணமாக ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிலைமை அங்கு சீரடைந்ததையடுத்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்படத் தொடங்கின.
ஷெல் தாக்குதலின்போது பள்ளி கட்டடங்களும் சேதமடைந்தன. அவற்றை தற்போது முடிந்தவரைச் சரிசெய்யபட்டுள்ளதாகவும், மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.