செய்திகள் :

"பேசில் நீங்க பீல்டிங் நில்லுங்க, நான் பெளலிங் போடுறேன்!" - நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிய சாம்சன்

post image

இந்தாண்டு ஐ.பி.எல். சீசனின் அனைத்து போட்டிகளும் ராஜஸ்தான் அணிக்கு முடிவடைந்துவிட்டன. 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது ராஜஸ்தான் அணி.

ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்து, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது ராஜஸ்தான் அணி.

Sanju Samson
Sanju Samson

ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் தற்போது கேரளத்திற்கு விரைந்திருக்கிறார்.

அங்கு தனது சினிமா நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார் சஞ்சு சாம்சன்.

சஞ்சு சாம்சன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மலையாள சினிமாவிலிருந்து சில நண்பர்களும் இருக்கிறார்கள்.

அவருடைய சினிமா நண்பர்கள் லிஸ்டில் டோவினோ தாமஸ், பேசில் ஜோசஃப் ஆகியோரின் பெயர்கள் முக்கியமானவையாக இருக்கும்.

அதிலும் பேசில் ஜோசஃபும், சஞ்சு சாம்சனும் நெருக்கமான நண்பர்கள் என்றே சொல்லலாம்.

சமீபத்தில்கூட பேசில் ஜோசஃபின் 'பொன்மேன்' திரைப்படத்தைப் பற்றி சஞ்சு சாம்சன் பேசியிருந்தார்.

Sanju Samson Instagram Story
Sanju Samson Instagram Story

இன்று தனது சினிமா நண்பர்களுடன் பேசில் ஜோசப் பின் வீட்டில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார். திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் பேட்டிங் ஆட, சஞ்சு சாம்சன் பவுலிங் செய்கிறார்.

பேசில் ஜோசஃப் பீல்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டு சஞ்சு சாம்சன் பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா எடுத்திருக்கிறார்.

HBD Mohanlal: இந்த தமிழ் படங்கள் இவர் படத்தோட ரீமேக்கா? மோகன்லால் படங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ஜெயிலர் படத்துல ரெண்டு சீன் வந்தாலும் தன்னோட கெத்து மேனரிஸத்தால ரெண்டு சீனையும் அள்ளி தின்னுட்டு போனவரு நம்ம லாலேட்டன் மோகன்லால். லால பத்தி சொல்லணும்னா, 'நம்ம ஊர்ல எப்படி நம்ம ரஜினியோ, அவுங்க ஊர் கேரள... மேலும் பார்க்க

Mohanlal: Biography புத்தக அறிவிப்பு; பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மோகன்லாலின் ட்ரீட்!

மலையாள திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'எம்புரான்' மற்றும் 'தொடரும்' ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து மோகன்லாலின் பெர... மேலும் பார்க்க

Cannes 2025: ``அது எனக்கு பலமாக இருந்தது!'' - கேன்ஸ் பட விழாவில் ஜூரியாக பயால் கபாடியா!

78-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நேற்றைய தினம் தொடங்கியது. கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்று பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குநர் பயால் க... மேலும் பார்க்க

Dies Irae: மிரட்டும் திகிலுடன் வருகிறது `டைஸ் ஐரே' - பிரமயுகம் இயக்குநரின் அடுத்தப் படைப்பு!

2024-ம் ஆண்டின் சிறந்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது பிரமயுகம். இந்தப் படத்தில், மம்மூட்டியின் நடிப்பு, திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை சிறப்பாக அமைந்ததாகக்... மேலும் பார்க்க

New Wave In Mollywood: இதுசவாலை தாண்டி உச்சம் தொட்ட `மல்லுவுட்’டின் கதை!

கடந்தாண்டு வெளியான படங்களின் மூலம் ஒரு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது மலையாள சினிமா. பெரிதும் எதிர்பார்க்காத நேரத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்', 'ப்ரமயுகம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாக... மேலும் பார்க்க