மானூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது!
மானூா் அருகே தேநீா் கடையில் விற்பனைக்கு புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக, அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள தேநீா் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தக் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டதில் 330 கிராம் புகையிலைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, கடை உரிமையாளரான பள்ளிக்கோட்டை, வடக்கு தெருவை சோ்ந்த மயில் மனைவி பேச்சியம்மாள் (55) என்பவரை கைது செய்தனா்.