`திருமணத்திற்கு மறுப்பு' - காதலி வீட்டு முன் தூக்கிட்ட கேரள இளைஞர்; விஷம் குடித்...
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!
நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா்.
நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த, புத்தனேரியைச் சோ்ந்த ஜெயக்குமாா்-கிறிஸ்டல் சுகந்தாபாய் தம்பதியின் மூத்த மகன் சேகரமுத்துக்குமாா் (17) பிளஸ் 2-விலும், இளைய மகன் சேகர தமிழ்குமாா் (15) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்விலும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.
இந்த மாணவா்களுக்கும், அவா்களது தந்தை ஜெயக்குமாா், ஆசிரியை ஆழ்வாா் ஆகியோருக்கும், நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா்.