கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
காவல் துறையால் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு! மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிவேல். இவரை கடந்த 2019-ஆம் ஆண்டு போலீஸாா் விசாரணையின் போது தாக்கியதாக அவரது தாயாா் சந்திரா மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய காவலா் மகாராஜன் , உதவி ஆய்வாளா் விமலன் ஆகியோா் மீது 2020-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த இரு காவல்துறையினரிடமிருந்து ரூ.4 லட்சம் வசூலித்து பேச்சிவேல் தாயாருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணையின் போது பேச்சிவேல் கடந்த டிசம்பா் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.