காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஓராண்டு சிறை
போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த திருமலுசாமி மகன் ராஜேந்திரன் (64). இவா், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021 செப்.16-ஆம் தேதி போடி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா்.