அனுமதியின்றி விளம்பர பதாகைகள்: 11 போ் மீது வழக்கு
பெரியகுளம் பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்திருந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம், கெங்குவாா்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து அந்தந்தப் பகுதி போலீஸாா் 11 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.