செய்திகள் :

சுப காரியங்கள் கைகூடும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

post image

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 23 - 29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்விக சொத்துகளில் வில்லங்கம் விலகும். பொருளாதாரம் மேன்மையடையும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோரை அனுசரித்து நடப்பீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். மகிழ்ச்சியான பயணம் செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புகழ் உயரும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.

விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்குப் பணவரவு உண்டு. பெண்கள் கவனமாகப் பேசவும். மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளைச் சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை உயரும். விவசாயிகள் உங்களுக்குக் கீழ்பணிபுரிவோரை அனுசரித்து நடப்பீர்கள்.

அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் பொருளாதார வளர்ச்சியில் திருப்தி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருமானமும், அந்தஸ்தும் உயரும். தொழிலில் பிரச்னைகள் நீங்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடைக்குப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்வீர்கள். விவசாயிகள் உடனிருப்போரை அனுசரித்து நடப்பீர்கள்.

அரசியல்வாதிகள் போட்டிகளைச் சமாளிக்க நேரிடும். கலைத் துறையினர் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் சிறிய பயணங்களைச் செய்வீர்கள். மாணவர்கள் பாடங்களில் போதிய பயிற்சியுடன் படித்து முடிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

காரியங்களை நினைத்தபடி முடிப்பீர்கள். இடையூறுகளை வெற்றி கொள்வீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சேமிப்பும் உயரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். விவசாயிகள் கூடுதல் நீர்வளத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். கலைத் துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் நன்கு உழைத்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 23, 24.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். கடன்ஏற்படாது. விதண்டாவாதம் செய்பவர்களிடம் ஒதுங்கி இருப்பீர்கள். மனதுக்கினிய செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு உதவிகள் கிடைக்கும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத் துறையினர் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பெண்கள் குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 25, 26.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். அரசு அலுவலர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்ள். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சந்திக்க நேரிடும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் சிறிய செலவுகளைச் செய்ய நேரிடும்.

பெண்கள் கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 27, 28.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

முயற்சிகள் வெற்றி அடையும். போட்டியாளர்களின் பலம், பலவீனத்தைப் புரிந்து செயல்படுவீர்கள். குடும்பச் சூழலில் புதிய மாற்றங்கள் தென்படும். எதிர்பாராத வருமானம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகள் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் உண்டு. பெண்கள் குடும்பத்தினருடன் அன்போடு பழகுவீர்கள். மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - மே 29.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

காரியங்களைச் சிந்தித்துச் செயல்படுத்துவீர்கள். வழக்குகள் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தோருக்கு நன்மைகள் அதிகரிக்கும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் உற்பத்தி அதிகரிக்கக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உண்டாகும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த அரசு சலுகைகள் கிடைக்கும். பிரச்னைகள் கட்டுக்குள் வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் யாருக்கும் கடன் தர வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் வருவாய் உயரக் காண்பீர்கள். கலைத் துறையினர் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். பெண்கள் கணவருடன் சுமுகமாக நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செயல்களில் நேர்த்தியாகக் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் நன்றாக அமையும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் பிறர் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு உழைப்பீர்கள். உயரதிகாரிகளின் நட்பு உண்டு. இழுபறியான பிரச்னைகளுக்கு முடிவு பிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். வியாபாரிகள் வரவு } செலவு விவகாரங்களில் கவனம் தேவை. விவசாயிகள் பயிர்த்தொல்லை இருக்காது.

அரசியல்வாதிகள் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத் துறையினரின் புகழ் அதிகரிக்கும். பெண்கள் பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

இன்று என்னுள் ஏதோவொன்று... நெகிழ்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!

’டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் பறந்து போ பட பாடல்!

பறந்து போ படத்தில் இடம் பெற்றுள்ள ’சன் ஃபிளவர்’ பாடல் வெளியாகியுள்ளது.கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிக... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடி... மேலும் பார்க்க

அறிக்கை வெளியிட ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் தடை!

தங்களுக்கு இடையிலான பிரச்னை பற்றி அறிக்கை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவ... மேலும் பார்க்க