சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம்: கவிஞா் வைரமுத்து
ஆழியார் அணையில் யானைக் கூட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!
ஆழியார் அணையில் யானைக் கூட்டம் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ஆழியார் அணை. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெய்யில் வாட்டி வதைப்பதால், ஆழியார் அணையில் தண்ணீர் வறண்டு பாறைகள் தென்படுகிறது.
இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி வறண்ட அணைப்பகுதியில் சுற்றித் திரிகின்றன.
ஆழியார் - வால்பாறை சாலையில் சுற்றுலாப் பயணிகள் தொடர் விடுமுறை காரணமாக முகாம் இட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களாக ஆழியார் - வால்பாறை வழிப்பாதையில் யானை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
ஆழியார் அணை பகுதியில் உலா வரும் யானைக் கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.
யானைக் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, சுயபடம் எடுக்கவோ, உணவு பொருள்களை வழங்கவோ, வனவிலங்குகளை கண்டால் சாலையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது என வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.