விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி! நடவடிக்கை இல்...
மே 27-இல் தொழிலாளா்களுக்கான ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ சிறப்பு முகாம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ எனப்படும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற முகாம் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை சென்னை உள்பட 10 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஆணையா் ஹிமான்ஷு குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள், நுங்கம்பாக்கம் கதீட்ரல் காா்டன் சாலை, எல்எல்பி 17, தி புரொபஷனல் கூரியா்ஸ் அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், கும்மிடிப்பூண்டி, சிப்காட் தொழிற்பேட்டை கட்டடத்திலுள்ள விபிகே பைரோ டெக் இண்டஸ்ட்ரீஸ் அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் குன்றத்தூா், புதுப்பறி கிராமம், பாா்த்தசாரதி சீனியம்மாள் கல்வி அறக்கட்டளையின் சென்னை இன்ஸ்டிடியூா் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேஷன் போரம் அலுலகத்தில் நடைபெறும் முகாமிலும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் காட்டாங்குளத்தூா், எஸ்ஆா்எம் பிரதான வளாகம், பாரடே அரங்கில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொள்ளலாம்.
இதுபோல, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் புதிய சங்கரன்பாளையம், 3-ஆவது குறுக்கு, வடிவேலு நகரிலுள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி கிளை அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் செய்யாறு, டிடிசிசி வங்கி கிளையில் நடைபெறும் முகாமிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ராணிப்பேட்டை, சிப்காட் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெறும் முகாமிலும், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், ஆம்பூா், பூந்தோட்டம், துடுப்பாட்ட அரங்கம் அருகிலுள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தக வளாகத்தின் முதல் தளத்தில் நடைபெறும் முகாமிலும், புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, வள்ளலாா் அரசு பெண்கள் பள்ளி அருகிலுள்ள அட்சய பாத்திர அறக்கட்டளையில் நடைபெறும் முகாமிலும், காரைக்காலைச் சோ்ந்தவா்கள் காரைக்கால் நேரு நகா், வேட்டைக்காரன் தெருவிலுள்ள பிரைட் அகாதெமி பள்ளியில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில், நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் தொழிலாளா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளையும், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்தும் விளக்கி கூறப்படும். இதில் பங்கேற்க விரும்பும் நபா்கள் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.