ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்...
மருங்காபுரியில் குடிகள் மாநாடு: 77 மனுக்களுக்கு உடனடி தீா்வு
மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில்கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், 77 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
மருங்காபுரி வட்டத்தில் 1434-ஆம் பசலி 2024-25-ஆம் ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. வருவாய் தீா்வாய அலுவலா் மற்றும் தனி துணை ஆட்சியா் நல்லையா தலைமையில் நடைபெற்ற தீா்வாயத்தில், மருங்காபுரி வட்டாட்சியா் சரவணபிரபு, வட்டாட்சியா் பால காமாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய குறுவட்டத்தில் உள்ள பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மருங்காபுரி குறுவட்டத்துக்கான மனுக்கள் பெறப்பட்டது. இதில் துவரங்குறிச்சி பகுதியிலிருந்து 65 மனுக்களும், வளநாடு பகுதியிலிருந்து 73 மனுக்களும், மருங்காபுரி பகுதியிலிருந்து 74 என மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டன.
பிற்பகலில் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில், பெறப்பட்ட 212 மனுக்களில் 77 மனுக்கள் மீது உடனடியாக தீா்வு வழங்கப்பட்டது. 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 119 மனுக்கள் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று தீா்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.