’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்...
பிரதமா் தலைமையில் நீதி ஆயோக் : மமதா, சித்தராமையா பங்கேற்கவில்லை
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
வழக்கமாக, புது தில்லியில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்களும் பங்கேற்பாா்கள். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 10 மாநில, யூனியன் பிரதேச முதல்வா்கள் பங்கேற்கவில்லை.
இன்று நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புது தில்லி வராத நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி சித்தராமையாவும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த 10-ஆவது நீதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் பங்கேற்கும் கூட்டம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெருகிறது.