செய்திகள் :

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

post image

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதிஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாநில முதல்வர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய விஷயங்கள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin
MK Stalin

மாநிலங்களுக்கான பங்கு 50 % உயர்த்தி வழங்கப்பட வேண்டும்

"கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி, பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுப்பு

‘P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்களின் பயிற்சி, கல்விப் பொருள்கள் மற்றும் இதர கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைபட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.

நகர்ப்புற மேம்பாட்டின் அவசியம்

நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருப்பதால் நகர்ப்புற மேம்பாட்டின் அவசியம் குறித்து கோரிக்கை வைத்தேன்" என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாண்லே நஷ்டத்தில் இயங்குகிறது… பாதி ஊழியர்களை காணவில்லை’ – அப்செட்டான முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி குருமாம்பேட்டில் இயங்கி வரும் அரசின் பாண்லே நிறுவனத்தில், 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பும்… திமுக-வின் குற்றச்சாட்டுகளும்!

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியிர... மேலும் பார்க்க

Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' - மிரட்டும் ட்ரம்ப்

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கி... மேலும் பார்க்க

'விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு' - பிரேமலதாவின் கணக்கு என்ன?

தே.மு.தி.க மீது மாறி, மாறி கூட்டணி பேரம் பேசும் கட்சி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார், பிரேமலதா. தே.மு.தி.க தலைவர... மேலும் பார்க்க

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க