ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!
யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக்கில், தீப்தி சர்மா யுபி வாரியர்ஸ் அணியை வழிநடத்தினார். இந்தத் தொடரில் தீப்தி சர்மா 122 ரன்கள் மற்றும் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இருப்பினும், 8 போட்டிகளில் விளையாடிய அவரது அணி 3 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்று கடைசி இடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில், தீப்தி சர்மா தற்போது தனது சக வீராங்கனை மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தீப்தி சர்மாவிடம் ஆருஷி கோயல் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாகவும், ஆக்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து அருஷி கோயல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக்ரா பிரிவில் இந்திய ரயில்வேயில் ஜூனியர் எழுத்தராக பணிபுரியும் அருஷி கோயல் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். மேலும், ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலும் வேலை பார்த்து வருகிறார்.
ஆக்ராவில் உள்ள சதார் காவல் நிலையத்தில் தீப்தி சர்மாவின் சகோதரர் சுமித் சர்மா முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தப் புகாரில் அருஷி கோயல் மீது திருட்டு, வீடு புகுந்து திருடுதல், நம்பிக்கை மோசடி மற்றும் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை அருஷி கோயல் முழுமையாக மறுத்துள்ளார்.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்