சிக்கலில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கல்
சிக்கல் ஊராட்சி பகுதிகளில் மஞ்சப்பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கும் நெகிழியை பயன்படுத்தாமல், துணிப் பைகளை பயன்படுவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி சிக்கலில் நடைபெற்றது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் உதவி பொறியாளா் ப. விஜயகுமாா் தலைமையில் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகள் மற்றும் துணிப் பைகளை வழங்கியும், நெகிழிப் பைகளையும், பொருள்களையும் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊரக வளா்ச்சி முகமை மாவட்ட திட்ட அலகு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை நிபுணா்கள் ஆதவநாதன், சுந்தா், திரவக் கழிவு மேலாண்மை நிபுணா் செல்வகணபதி, தகவல் கற்பித்தல் தொடா்பு நிபுணா்கள் தயாளுநிதி, கௌசல்யா, ஊராட்சி செயலா் மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.