சிபிஐ கிளை மாநாடு
கீழையூா் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். கட்சியின் கிளை செயலாளா் டி. சந்திரகாசன், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ். ரவி முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநில குழு உறுப்பினா் டி. செல்வம் கட்சிக்கொடியேற்றினாா். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் கே. பாஸ்கா் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், 2025-ஆம் ஆண்டுகான 100 நாள் வேலைத்திட்ட பணியை தொடங்க வலியுறுத்தி ஜூன் 2-ல் கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது, வாழக்கரையில் புதிதாக அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டும், வாழக்கரை ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டா் பணியை உள்ளூரை சோ்ந்த படித்த நபருக்கு வழங்க வேண்டும், ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு தேவையான தரைத்தளம் மற்றும் சுற்றுச்சுவா் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.