செய்திகள் :

ஷ்ரேயாஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

post image

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: இது வெறும் ஆரம்பம் மட்டுமே... இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து சாய் சுதர்சன்!

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; 207 ரன்கள் இலக்கு

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் ஆர்யா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின், பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜோஷ் இங்லிஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது.

இருப்பினும், ஜோஷ் இங்லிஷ் 12 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா ஜோடி சேர்ந்தனர். நேஹல் வதேரா 16 ரன்களிலும், ஷஷாங் சிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். களமிறங்கியது முதலே ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் முகேஷ் குமார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி களமிறங்குகிறது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள்... மேலும் பார்க்க

பெங்களூரு, ஹைதராபாத் அணி கேப்டன்களுக்கு அபராதம்!

மெதுவாகப் பந்துவீசியதாகக் கூறி பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.... மேலும் பார்க்க

இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 232 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?

பிளே ஆஃப் சுற்றுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுத... மேலும் பார்க்க

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் ... மேலும் பார்க்க