ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.
இதையும் படிக்க: பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.
Rahul Dravid, Kevin Pietersen, Anil Kumble, Daniel Vettori, Virat Kohli, Shane Watson, Faf du Plessis, Rajat Patidar... and now Jitesh Sharma! ❤️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 23, 2025
The 9️⃣th leader of the BOLD! Go well, Jitu! ♾️
PS. Don’t worry, Rajat is among the impact subs. pic.twitter.com/iIAN0Aas1N
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல்லுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஜத் படிதார் இம்பாக்ட் வீரர்களுக்கான தெரிவாக அணியில் உள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர் மற்றும் ஜெயதேவ் உனத்கட் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜித்தேஷ் சர்மா முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாக வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.