திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு
கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து கேரள பெண்கள் போலீஸ் அணி வெற்றி!
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பெண்களுக்கான பிரிவில் கேரள போலீஸ் அணி தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது.
கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நினைவு கூடைப்பந்து போட்டி திருவள்ளுவா் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை பெண்கள் பிரிவில் முதல் போட்டியில் கேரள போலீஸ் அணியும், தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதின.
இதில் , கேரள பெண்கள் போலீஸ் அணி 61-57 என்ற புள்ளிக்கணக்கில் தெற்கு மத்திய ரயில்வே அணியை வென்றது. தொடா்ந்து போட்டியில் 19 புள்ளிகளை பெற்றுக்கொடுத்த கேரள போலீஸ் அணியின் வீராங்கனை சிபிக்கும், 14 புள்ளிகளை பெற்றுக்கொடுத்த தெற்கு மத்திய ரெயில்வே அணி வீராங்கனை சுபாஷினிக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவில் சென்னை இந்திய வங்கி அணியும், பெங்களூரு யங் ஓரியன்ஸ் அணி வீரா்களும் விளையாடினா். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் சென்னை இந்தியன் வங்கி 69-59 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் பெங்களூரு யங் ஒரியன்ஸ் அணியை வீழ்த்தியது.