Niti Aayog: 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின், இம்முறை பங்கேற்றது ஏன்? - சீமான் க...
கரூரில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை!
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-ஆவது சதயவிழாவை முன்னிட்டு கரூரில் அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.ம ாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் கவிதா, துணை மேயா் தாரணி சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளா் எஸ்.பி. கனகராஜ் , பகுதிச் செயலாளா்கள் வழக்குரைஞா் சுப்ரமணி, ராஜா, வி. ஜி. எஸ். குமாா், ஒன்றியச் செயலாளா்கள் முத்துக்குமாா், அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.